Tuesday, February 10, 2026

OL ICT 2007 DBMS

(i) தரவு என்பது யாது?

(ii) மிகப் பெரிய கனவளவுள்ள தரவுகளைக் கையாள்வதில் உள்ள மூன்று இடர்ப்பாடுகளைப் பட்டியற்படுத்துக.

(iii) தரவுத்தளம் என்பது யாது ? தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேலே (ii) இல் குறிப்பிட்ட இடர்ப்பாடுகளை எங்ஙனம் வெல்வரெனச் சுருக்கமாக விளக்குக.

(iv) தரவுத்தளங்களைப் படைத்து, பேணி, பயன்படுத்தும் ஒரு தொகுதி மென்பொருளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பொதுப் பெயர் யாது?

அத்தகைய மென்பொருள் பொதிகளின் இரு பிரசித்திபெற்ற உதாரணங்களைப் பட்டியற்படுத்துக.

உமது பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றிய தரவுகளைக் கொண்ட ஓர் எளிய தரவுத்தளத்தை அமைக்க வேண்டியுள்ளதெனக் கொள்க. தரவுத்தளத்தில் ஓர் அட்டவணையை அமைக்கப் பயன்படுத்தத்தக்க ஐந்து புலங்களைப் பட்டியற்படுத்துக.

நீர் அட்டவணையில் நுழைக்கும் இரு மாதிரிப் பதிவுகளைத் (records) தருக.

PowerPoint Exercise 2

Open Microsoft PowerPoint, choose and Design template and create the following presentation:

Slide #1:

Title: Little Miss Jennifer

At the bottom of the page: Your name, date, and slide number

Hint: To add your name, date and slide numeration on all slides go to View>>Header and Footer

To add a new slide go to Insert>>New Slide and select a format.

To delete a slide, select a slide on the left side of the window, go to Edit>>Delete Slide.

Remember that the font size should not be smaller than 28. You may use your own font styles in this presentation.

Slide #2:

Title on top of the page: Little Miss Muffet

Text: Little Miss Muffet

Sat on a tuffet,

Eating her curds and whey;

[Please note that there are no bullets in this text!!!]

At the bottom of the page: Your name, date, and slide numeration

Add notes for yourself: Read slowly

Hint: To insert image go Insert>>Picture>>From File

To add notes, click in the window where it says "Click to add notes".

Slide #3:

Title on top of the page: Little Miss Jennifer

Text: Along came a spider,

Who sat down beside her

At the bottom of the page: Your name, date, and slide number

Slide #4:

Title on top of the page: Little Miss Jennifer

Text: And frightened Miss Jennifer away.

Image: (frightened.jpg)

At the bottom of the page: Your name, date, and slide number

Slide #5:

Title on the top of the page: Presenters:

Text:

  • Elmo
  • Miss Piggy
  • Kermit the Frog
  • Mr. Poodlepants
  • Baby Natasha
  • Count von Count

After each presenter add a sound file. Make it clickable.

At the bottom of the page: Your name, date, and slide number

Hint: To add a sound go to Insert>>Movies and Sounds>>Sound from File

Slide #6:

Title on the top of the page: Reading times:

Table:

Elmo4:15 pm
Miss Piggy4:30 pm
Kermit the Frog4:45 pm
Mr. Poodlepants5:00 pm
Count von Count5:15 pm

At the bottom of the page: Your name, date, and slide number

Hint: To insert a table go to Insert>>Table.

Slide #7:

Title on the top of the page: Marks for reading:

Insert Chart based on the following table:

Elmo3.9
Miss Piggy3.5
Kermit the Frog3.8
Mr. Poodlepants4.0
Count von Count4.2

At the bottom of the page: Your name, date, and slide number

Hint: To insert a chart go to Insert>>Chart

Slide #8:

Text: The End

At the bottom of the page: Your name, date, and slide numeration

Once you are done with your slides, view your Slide Show. Add Custom or Preset Animation and Sounds (go to Slide Show, Preset Animation or Custom Animation).

Save your presentation twice: the first time as a PPT presentation and the second time as a Web Page.

Create a Print Preview for Handouts (6 slides per page).

Show your presentation in PowerPoint and web page formats and the Print Preview to the teacher.

MS-Word Exercise (Diagnostic Test 2021 Wayamba)

Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். 

கணினித் திரை  (Monitor / Screen)

எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு  (Visual Display Unit)  எனவும் அழைக்கப்படும்.  கணினித் திரையில் பல வகைகள் உள்ளன. அவையாவன

கதோட்டுக் கதிர்க் குழாயுடன் கூடிய திரை (Cathode Ray Tube (CRT) Monitor கணினியின் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை வெளியீட்டு உத்தியாகப் பயன்படுத்தப்படும் இவ்வகைத் திரை அளவில் பெரியதாக இருக்கும் அதேவேளை அதிக அளவு மின்சக்திய நுகர்கின்றது. கணினித்திரையில் வெவ்வேறு தொழிற்நுட்பங்களின் வருகையின் காரணமாக தற்போது  இது படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீங்குகின்றது.

திரவப் படிகக் காட்சி  Liquid Crystal Display – LCD

சமதளக் காட்சித்  (flat bed)  தொழினுட்பத்துடன் கூடிய இக்கணினித்திரை இரு வளைதகு (flexible) முனைவாக்கிய (polarized) iru மின்வாய்களுக்கிடையே ஒரு பளிங்குக் கரைசலைச் (liquid crystal) சேர்த்து இது உருவாக்கப்படுகிறது.  குறைந்தளவு மின் சக்தியை நுகர்வது மற்றும்  மேசைமீது இதனை வைக்க அதிக இடம் அவசியமில்லை.என்பன அணுகூலங்களாகும்.  This is a flat screen type technology. LCD displays utilize two sheets of polarizing material with a liquid crystal solution between them. LED consumes less electricity.

ஒளிகாலும் இருவாயி  - Light Emitting Diode – LED

ஒளி காலும் இருவாயியைப்  (Light Emitting Diode) பயன் படுத்தி உருவாக்கப்படுகின்றன.
 குறைந்த அளவு மின்சக்தியை  நுகர்கிறது. பொது இடங்களில் காட்சிப் பலகைகள், பெயர்ப்பலகைகள் போன்றவற்றில் தற்போது   LED தொழில் நுட்பமே பயன்படுகிறது.

பல்லூடக எறிவை (Multimedia Projector)

ஒரே நேரத்தில்  பல பேர்  பார்க்கக் கூடியவாறு பெரிய திரையில் காட்சியைப் பெற பல்லூடக எறிவை பயன் படுகிறது. பாடசாலைகளில் கற்பித்தல் கருவியாகவும் வணிக நிறுவனங்களில் பல்வேறு  கூட்டங்களை நடத்துவதற்கும் நிகழ்த்துகைகளைக் (presentation) காண்பிப்பதற்கும் வீடியோ காட்சிகளைக்  காண்பிப்பதற்கும்  பயன்படுத்தப்படுகிறது.  This is the device used to get information output to a wide screen so that several people can view it at the same time. This can be used as a visual aid by a teacher to display presentations, to conduct business meetings or to watch videos for entertainment.

வன்பிரதி  (Hard Copy)

காகிதத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை வன் பிரதி எனப்படுகிறது. தொட்டுணரக்கூடிய கணினி வெளியீடாக வன்பிரதியைக் குறிப்பிடலாம்.

அச்சுப் பொறி   - Printers

திரையில் தோன்றும் தகவல்களை காகிதத்தில் பொறிப்பதே அச்சுப்பொறியின் தொழிலாகும். தெரிவு செய்யப்படும் அச்சுப்பொறியினைப் பொருத்தே காகிதத்தில் வருவிளைவின் தரம் காணப்படும்

அச்சுப்பொறிகள் அழுத்தும் அச்சுப் பொறி (impact printers), அழுத்தா அச்சுப் பொறி (non-impact printers)   என இரு வகைப்படும்.

அழுத்தும் அச்சுப் பொறி (Impact Printers)

அச்சிடும் தொழினுட்த்தில் அழுத்தச்சுப் பொறிகள் முதன்மை வரிசைக்கு உரியனவாகும். இங்கு பொறிமுறை உத்தியானது அச்சிடும் தலை (printer head) எனப்படும் பகுதி தாளின் மீது மோதுவதினூடாக அச்சிடல் நடைபெறுகின்றது. இவ்வழுத்தம் காரணமாக அது தொழிற்படும்போது இரைச்சல் ஏற்படுகிறது.  அச்சிட பயன்படுத்தப்படும் மை நாடா (ink ribbon cartridge) விலை மலிவனதால் மிகவும் இலாபகரமானதாகும்.  வங்கிகள், கடைகள் போன்ற இடங்களில் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

  1. Daisy Wheel printer
  2. Dot matrix printers
  3. Line printer
  4. Plotter

அழுத்தா அச்சுப்பொறி  (Non Impact Printers)  

இவ்வச்சுப்பொறி பயன்படுத்தப்படும் தாளின் மீது அழுத்துவதில்லை. ஆகையால், இவற்றில் இரைச்சல் ஏற்படுவதில்லை. அச்சுப் பிரதிகள் மிகத் தெளிவாகக் காணப்படும். எனினும், இதற்குப் பயன்படுத்தப்படும் ஊடகம் விலைகூடியது ஆகையால், இதனைப் பயன்படுத்தல் இலாபகரமானதன்று.

  1. Inkjet printers / Bubble jet Printer
  2. Laser printers                          

Daisy Wheel printer

ஆரம்ப கால அச்சுப் பொறிகளில் ஒன்று. தட்டச்சுப் பொறி (type writer) போன்றது.  ஒரு வினாடியில் 25-55 characters per second எழுத்துக்கள் என மிக மெதுவாக அச்சிடும் இவ்வச்சுப் பொறி தற்போது பயன் பாட்டிலில்லை.

Don matrix printers

அச்சுப் பொறியின் தலைப் பகுதியிலுள்ள  ஊசி போன்ற முனைகள் மை தோய்க்கப் பட்ட நாடாவில் மோதுகின்றமையால் சிறிய புள்ளிகளாக தாளின் மீது எழுத்துகளை அச்சிடுகின்றன. அச்சிடுவதற்கு Ribbon cartridge எனும் நாடா பயன் படுத்தப்படுகிறது.

பிற அச்சுப் பொறி;களுடன் ஒப்பிடும் போது இதன் அச்சிடும் வேகம் மிக குறைவானது. இதன் மூலம்; படங்களை துல்லியமாக அச்சிட முடியாததுடன்  அச்சுத் தரமும்; குறைந்தது. ஒரு வினாடியில் 100-600 (உhயசயஉவநசள pநச ளநஉழனெ) எழுத்துக்களை அச்சிடக் கூடியது.

வரி அச்சுப்பொறி (Line Printer)

ஒரு தடவை ஒரு வரி வீதம் அச்சிடும் இப்பொறி

மிகவும் விரைவான அச்சுப்பொறியாகும். இது ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாழ 3000 வரிகளை அச்சிடத்தக்கது. வணிக நிறுவனங்களில் பாரிய அளவிலான அச்சிடும் தேவைகளுக்கு இது பயன் படுகிறது. 

மைப் பீச்சு அச்சுப் பொறி  Inkjet printers / Bubblejet Printer

Buy Canon Inkjet Printer - PIXMA MG2570S Online in Sri Lanka - SINGER

இவ்வகைப் பிரின்டா; மையை வெப்ப மேற்றுவதன் மூலம்  குமிழிகளை உருவாக்கி எழுத்தாக தெழியச் செய்கிறது. இங்கு அச்சிடுவதற்கு ink cartridge  பயன் படுத்தப்படுகிறது.விலை குறைந்த இவ்வச்சுப் பொறி மூலம்; உயர் தரத்தில் எழுத்துக்களையும் வரைபுகளையும் அச்சிட முடியும். இவை வண்ணத்திலும் அச்சிடக் கூடியது.  மேலும் இவை டொட் மேட்ரிக்ஸ் பிரின்டா;களை விடவும் வேகமானது.. ஒரு வினாடியில் 250  (உhயசயஉவநசள pநச ளநஉழனெ) எழுத்துக்களை அச்சிடக் கூடியது. இதற்கு பயன்படுத்தப்படும் மை விலை அதிகம் என்பதால் அச்சிடுவதற்கான செலவும் அதிகமாகும்.

.லேசர் அச்சுப் பொறி Laser printers

லேசர் அச்சுப்பொறியில் அச்சிடப்பட வேண்டிய பகுதி ஒரு லேசர்க் கற்றையின் மூலம் (ஓர் ஆடியினூடாக) ஓர் ஏற்றிய உருளை (Drum) மீது அனுப்பப்படுவதும் அதன் மீது ஒரு பொறியுறையில் (Cartridge)) உள்ள உலர் மைப்பொடி (Toner) தொடுகையுறுவதனூடாக அச்சிடப்படுதலும் நடைபெறுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 20 வரையிலான A4 அளவு தாள்களை அச்சிடுகின்றன.  XU Toner Cartridge  %yk; A4 காகித அலவில் 2000 – 3000 gpujpfis vLf;fyhk.; உயர் தரத்திலான தெளிவான எழுத்துக்களையும் உருக்களையும் அச்சிடுவதற்கு மிகவும் உகந்த சாதனம் லேசர் அச்சுப்பொறியாகும்

வெப்ப அச்சுப்பொறி (Thermal Printer) 

இந்த அச்சுப்பொறியில் வெப்பத்தைப் பயன்ப டுத்தித் தாளின் மீது அச்சிடல் நடைபெறுகின்றது. தன்னியக்கக் காசளிப்புப் பொறி  (ATM) போன்றவற்றில் பற்றுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க இது அதிக அளவில் பயன்படுத்தப்படு கின்றது.

வரைவி (Plotter)

கட்டடக் வடிவமைப்புகள், நகரத் திட்டமிடல்கள், கப்பற் பயணத் திட்டங்கள் போன்ற பொறியியல் சார்ந்த வரை படங்களை பெரியளவில் அச்சிட வரைவிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இங்கு தாளின் மீது ஒரு பேனாவை நகர்த்தி அச்சிடல் நடை பெறுகிறது.  

Audio Output Devices


Speakers

Blaupunkt BLP 3030 TWS Bluetooth Speaker Set - 2x 3W


Headphones / Headsets

Headsets | Dell Shop Sri Lanka

Health Issues & Solutions

நீண்ட நேர கணினி பயன் பாட்டால் ஏற்படும் உடல் நல பிரச்சினைகளும் தீர்வுகளும்

OL ICT 2011 DBMS

19. ஒரு தொடர்புடைமை தரவுத்தள அட்டவணையின் (relational database table) முதல் சாவி (primary key) தொடர்பாகப்  பின்வருவனவற்றில் எது சரியானது ?

(1) அது ஒரு தனியானதாக (unique) இருக்க வேண்டும்.

(2) அது எண் (numeric) தரவு வகையாக இருக்க வேண்டும்.

(3) அது வெற்றாக இருக்கலாம்.

(4) அது பாடத் (text) தரவு வகையாக இருக்க வேண்டும். 

20, 21 ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுவதற்குப் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்துக. 

20. மேற்குறித்த அட்டவணையில் பதிவேடுகளின் எண்ணிக்கையையும் புலங்களின் எண்ணிக்கையையும் முறையே  வகைகுறிக்கும் சரியான பெறுமானச் சோடியைத் தெரிந்தெடுக்க.

(1) 4,6 

(2) 5,6 

(3) 6,4| 

(4) 6,5 

21. பின்வருவனவற்றில் எது மேற்குறித்த அட்டவணைக்கு முதல் சாவியாக மிகவும் உகந்தது ? 

(1) தலைப்பு  (புத்தகத்தின் பெயர்)

(2) விலை 

(3) ISBN எண் 

(4) ஆசிரியர் (எழுத்தாளர்)

3. ஒரு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பின்வரும் அட்டவணையைக் கருதுக. 

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு குறித்த ஆசிரியர் உண்டு. ஓர் ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களைக் கற்பிக்க இயலும். 

(i) மேற்குறித்த உதாரண அட்டவணையைப் பயன்படுத்தி "தர மறுபதிவை" (data duplication) விளக்குக.

(ii) தரவு மறுபதிவு ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதைச் சுருக்கமாக விளக்குக. (iii) மேற்குறித்த அட்டவணையில் புலங்கள் ஒவ்வொன்றையும் வகைகுறிப்பதற்கு மிகவும் உகந்த தரவு வகைகளை (data types) இனங்காண்க. 

OL ICT Spreadsheet 2014

13 மற்றும் 14 இரு வினாக்கள் தரப்பட்டுள்ள விரிதாளை அடிப்படையாகக் கொண்டவை

  1. =$A$2+A3 எனும் சூத்திரத்தை கலம் (cell) A4 கொண்டுள்ளது. இச் சூத்திரம் கலம் A5 இற்குப் பிரதி செய்யப்பட்டால் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?
    (1) 2 (2) 4 (3) 6 (4) 8
  2. கலம் C2 இல் =sum(A2:B2) எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. கலம் C2 இலுள்ள சூத்திரம் C3 இற்குப் பிரதி செய்யப்பட்டால் கலம் C3 இல் எழுதப்படுவது பின்வருவனவற்றுள் எது?
    (1) =sum(A2:B2) (2) =sum(A3:B3) (3) =sum(B2:B3) (4) =sum(A2:A3)

(i) வேலையாள் ஒருவரின் மாதாந்தக் கொடுப்பனவை (monthly payment) அம்மாதத்தின் வரவை (attendance) நாளாந்த சம்பளக் கொடுப்பனவினால் (daily rate) பெருக்குவதன் மூலம் கணிக்கப்படும். Employee Number E0001 ஐ உடைய வேலையாளின் அக்டோபர் மாதத்திற்கான மாதக் கொடுப்பனவைக் காட்சிப்படுத்துவதற்கு கலம் E2 இல் எழுதவேண்டிய சூத்திரத்தை எழுதுக.

(ii) ஏனைய வேலையாட்களின் அக்டோபர் மாதத்துக்கான சம்பளக் கொடுப்பனவுகளைக் கணிப்பிடுவதற்குத் தேவையான படிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

கலம் .............. ஐத் தெரிவுசெய்க. .

............ இற்குரிய படவுரு (icon) இன் மேல் சொடுக்குக.

......... இலிருந்து ............. வரையான கலவீச்சினைத் தெரிவுசெய்க.

.............. இற்குரிய படவுருவின் மேல் சொடுக்குக.

A - E வரை முகப்பு அடையாளமிடப்பட்டவற்றிற்குச் சரியான பதங்களை கீழே தரப்பட்ட பட்டியலிலிருந்து தெரிவுசெய்க.

பதங்களின் பட்டியல் : ஒட்டுதல் (Paste), வெட்டுதல் (cut), பிரதி எடுத்தல் (copy), E3, E2, E151

(iii) அனைத்து வேலையாட்களுக்கும் மாதாந்த உபகாரக் கொடுப்பனவு (Bonus) வழங்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான உபகாரக் கொடுப்பனவுச் சதவீதம் (Bonus Rate) கலம் G2 இல் தரப்பட்டுள்ளது.

Monthly Payment ஐ Bonus Rate இனால் பெருக்குவதன் மூலம் உபகாரக் கொடுப்பனவு அளவு கணிக்கப்படும்.

ஏனைய வேலையாட்களுக்குரிய உபகாரக் கொடுப்பனவுகள் இச்சூத்திரத்தை ஏனைய கலங்களுக்கு பிரதிசெய்வதன் மூலம் கணிக்கப்படும் எனக் கருத்திற் கொண்டு Employee Number E0001 ஐ உடைய வேலையாளின் உபகாரக் கொடுப்பனவை கலம் F2 இல் காட்சிப்படுத்துவதற்குரிய சூத்திரத்தை எழுதுக.

(v) மேலே (iii) இல் எழுதப்பட்ட சூத்திரத்தை கலம் F3 இல் பிரதிசெய்து Employee Number E0002 இன் உபகாரக் கொடுப்பனவைக் கணிப்பதற்கான சூத்திரத்தை எழுதுக.

CLICK HERE TO DOWNLOAD THE WORKSHEET

Block Diagram of the Computer System

உள்ளீட்டு அலகு (Input Unit)

கணினிக்குத் தரவுகள் உள்ளீட்டு அலகினூடாக வழங்கப்படும். உள்ளீட்டு அலகில் பயன் படும் சாதனகங்கள் (Input Devices) உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி

வருவிளைவு அலகு (Output Unit)

செயற்பாட்டுக் குட்படுத்தப்பட்ட தரவுகள் வருவிளைவு அலகினூடாகப் பயனருக்கு வழங்கப்படும்.

வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும்.  உதாரணம்:- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி,

மைய முறைவழி அலகு  (CPU - Central Processing Unit)

மைய முறைவழி அலகு  3  பிரதான பகுதிகளைக் கொண்டது

கட்டுப்பாட்டு அலகு Control Unit
எண்கணித, தர்க்க அலகு Arithmatic & Logical Unit
நினைவகப் பதிவகம் Registers

கட்டுப்பாட்டு அலகு Control Unit

கணினியின் எல்லாக் கட்டுப்பாட்டுப் பணிகளும் இவ்வலகின் மூலம் மேற் கொள்ளப்படுகின்றன. தேவையான சந்தர்ப்பங்களில் அவசியமான விதத்தில் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு கணினியின் எல்லாப் பகுதிகளையும் கட்டுப்படுத்தல் இவ்வலகின் மூலமே நடை பெறுகின்றது.

எண் கணித, தர்க்க அலகு Arithmetic & Logical Unit

எண்கணித செயற்பாடுகளும்  தர்க்கச் செயற்பாடுகளும்  இவ்வலகிலேயே  நடை பெறுகின்றன.

பிரதான நினைவகம் Main Memory

கணிப்புகளுக்காக அல்லது செயற்பாடுக்கு உட்படுத்துவதற்காக  மைய முறைவழி அலகிற்கு அனுப்பத் தயார் செய்யப்பட்டுள்ள தரவுகளையும் மைய முறைவழி அலகிலிருந்து புறத்தே வழங்கப்படும் தகவல்களையும் தற்காலிகமாக வைத்திருப்பதற்குப் பிரதான  நினைவகம் பயன்படுகிறது.

கணினியின் பிரதான நினைவகமாக RAM (Random Access Memory தற்போக்கு அணுகல் நினைவகம்) தொழிற் படுகிறது. இது ஒரு தற்காலிகமான நினைவகமாகும். இங்கு தரவுகள் மின் இணைப்பு இருக்கும் போது மட்டுமே தங்கியிருக்கும். மின் இனைப்பு துண்டிக்கப்படும் போது பிரதான நினைவகத்திலிருந்து அனைத்து தரவுகளும் இழக்கப்படும்.

துணை நினைவகம் Secondary Memory

பிரதான நினைவகத்தில் தரவுகள் தற்காலிகமாகவே தங்கியிருக்கும். எனினும் அத்தரவுகளை எதிர் காலத் தேவைகளுக்கும் பயன் படுத்த வேண்டுமானால் அதனை நிரந்தரமாக ஓரிடத்தில் தேக்கி வைக்க வேண்டும். அவ்வாறு நிரந்தரமாக தரவுகளைத் தேக்கி வைக்கும் அலகே துணை நினைவகம் ஆகும். இத்தேவைக்குப் பயன் படும் சாதனங்களை துணை தேக்கச் சாதனங்கள் (Storage Devices) எனப்படும். உதாரணம் hard disk, CD, DVD

Input & Output Devices

  1. தரவுகளை உள்ளீடு செய்வதற்கும் கணினிக்கு கட்டளைகளை வழங்குவதற்கும் பயனர்களை அனுமதிக்கும் சாதனம்

a) வெளியீட்டு சாதனம்
b) உள்ளீட்டு சாதனம்
c) நினைவகம்
d) a மற்றும் b இரண்டும்

2. எந்த சாதனங்களின் உதவியுடன் பயனர் கணினியுடன் தொடர்பு கொள்கிறார்?

a) உள்ளீட்டு சாதனம்
b) வெளியீடு சாதனம்
c) மென்பொருள் சாதனம்
d) a மற்றும் b இரண்டும்

பதில்: (ஈ), உள்ளீட்டு-வெளியீட்டு சாதனம் தரவை ஊட்டுகிறது மற்றும் கணினியிலிருந்து தரவை ஏற்றுக்கொள்கிறது.

3. கணினியால் செயலாக்கப்பட்ட தரவுகளின் முடிவுகளைத் தெரிவிக்கும் மற்றும் டிஜிட்டல் தகவலை மனிதர்கள் எளிதாகப் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வடிவமாக மாற்றும் சாதனம் என்று அழைக்கப்படுகிறது .

a) உள்ளீடு
b) Monitor
c) Output
d) விசைப்பலகை

4. பின்வரும் குழுக்களில் எது உள்ளீட்டு சாதனங்கள் மட்டும் கொண்டுள்ளது?

a) மவுஸ், கீபோர்டு, மானிட்டர், ஜாய்ஸ்டிக்
b) மவுஸ், கீபோர்டு, பிரிண்டர், லைட் பென்க்
c) மவுஸ், கீபோர்டு, ஸ்கேனர், ஜாய்ஸ்டிக், லைட் பேண்ட்
d) மவுஸ், கீபோர்டு, டிராக்பால், டச் ஸ்கிரீன், மைக்ரோஃபோன்) c மற்றும் d இரண்டும்

5. பின்வருவனவற்றில் சுட்டும் சாதனம் அல்லாது எது?
a) சுட்டி
b) Joystick
c) Light pen
d) Digitizer

டிஜிடைசர் என்பது அனலாக் தகவலை டிஜிட்டல் வடிவமாக மாற்றும் உள்ளீட்டு சாதனமாகும்.

6. கணினியில் உரை, எண்கள் மற்றும் கட்டளைகளுக்கு எந்த உள்ளீட்டு சாதனம் பயன்படுத்தப்படுகிறது ?

a) மவுஸ்
b) Keyboard
c) Scanner
d) மேலே உள்ள அனைத்தும்

7. விசைப்பலகையில் உள்ள செயல்பாட்டு விசைகளின் function keys எண்ணிக்கை

( a ) 14
(b) 12
(c) 13
(d) 15

8. Ctrl, Shift மற்றும் Alt ஆகியவை _ _ _ _ _ __keys என அறியப்படுகின்றன.

(a) செயல்பாடு function
(b) மாற்றி modifier
(c) எண்ணெழுத்து  alphanumeric
(d) சரிசெய்தல் adjustment

9. பெரிய அல்லது சிறிய எழுத்துக்களை உருவாக்க எந்த விசைப்பலகை விசை பயன்படுத்தப்படுகிறது ?

(a) ESC
(b) Return / எண்டர் கீ
(c) Shift
(d) a மற்றும் c இரண்டும்

10. கீபோர்டில் டேப் கீயின் பயன்பாடு

(a) திரையின் குறுக்கே ஒரு கர்சரை நகர்த்துவதற்கு
(b) ஒரு பத்தியை உள்தள்ளுவதற்கு
(c) கர்சரை திரையின் கீழே நகர்த்துவதற்கு
(d) a மற்றும் c இரண்டும்

11. வயர்லெஸ் மவுஸ் மூலம் தொடர்பு கொள்கிறது

(a) ரேடியோ அலைகள்
(b) அகச்சிவப்பு அலை
(c) நுண்ணலைகள்
(d) மின்காந்த சமிக்ஞை

12. பின்வருவனவற்றில் எது உள்ளீட்டு சாதனங்கள் அல்ல?

(a) வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன்
(b) பார் கோட் ரீடர் மற்றும் ஸ்மார்ட் கார்டு ரீடர்
(c) ஆப்டிகல் கேரக்டர் ரீடர் மற்றும் ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன்
(d) மானிட்டர் மற்றும் பிரிண்டர்

13. பின்வருவனவற்றில் எது உள்ளீட்டு சாதனங்கள்?

(a) ட்ராக் பால்  Track ball
(b) ஸ்கேனர் Scanner
(சc) டச் ஸ்கிரீன் Touch screen
(d) Magnetic Ink Card Reader (MICR) காந்த மை அட்டை ரீடர் (எம்ஐசிஆர்)
(e) மேலே உள்ள அனைத்தும்

14. பின்வருவனவற்றில் எது வெளியீட்டு சாதனம் அல்ல?

(a) மானிட்டர்
(b) பிரிண்டர்
(c) ஹெட்ஃபோன்
(d) ஸ்கேனர்

15. ப்ரொஜெக்டர் என்பது _ _ _ _ _ _ சாதனம் ஆகும்,

(a) உள்ளீடு
(b) வெளியீடு
(c) உள்ளீடு மற்றும் வெளியீடு
(d) மானிட்டர் உள்ளீடு

16. OCR என்பது

(a) Outsized Character Reader
(b) Optical Character Reader
(c) Operational Character Reader
(d) Only Character Reader

17. OMR என்பது

(a) Optical Mark Recognition
(b) Optical Magnetic Reader
(c) Only Mark Recognition
(d) Optical Markup Recognition

18. எம்.ஐ.சி.ஆர் MICR என்பது

(a) Magnetic Ink Card Reader
(b) Magnetic Ink Code Recognition
(c) Magnetic Ink Character Recognition
(d) None of these

19. டிஜிட்டல் கேமரா எந்த வகையான சாதனம்?

(a) வெளியீடு
(b) உள்ளீடு
(c) உள்ளீடு மற்றும் வெளியீடு
(d) மென்பொருள்

20. பின்வரும் குழுக்களில் எது வெளியீட்டு சாதனங்களை மட்டுமே கொண்டுள்ளது?

(a) ஸ்கேனர், மானிட்டர், பிரிண்டர்
(b) மவுஸ், மானிட்டர், பிரிண்டர்
(c) விசைப்பலகை, மானிட்டர், பிரிண்டர்
(d) மானிட்டர், பிரிண்டர், ப்ளோட்டர்

21. கணினித் திரையில் காட்டப்படும் பிக்சல்களின் எண்ணிக்கை அழைக்கப்படுகிறது

(a) வண்ண ஆழம்  (a) color depth
(b) தெளிவுத்திறன் resolution
(c) புதுப்பிப்பு விகிதம்  refresh rate
(d) பார்க்கும் அளவு viewing size

22. பிரிண்டரின் வேகத்தை கணக்கிட பின்வரும் அலகுகளில் எது பயன்படுத்தப்படுகிறது ?

(a) CPM
(b) PPM
(c) LPM
(d) மேலே உள்ள அனைத்தும்

23. அச்சுப்பொறியின் வெளியீட்டுத் தரம் அளவிடப்படுகிறது

(a) சதுரத்திற்கு புள்ளிகள்
(b) ஒரு அங்குலத்திற்கு புள்ளிகள்  (dots per inch
(c) ஒரு அங்குலத்திற்கு புள்ளிகள் பிரிண்டர்
(d) இவை அனைத்தும்

24. USB என்பதன் முழு வடிவம்

(a) யுனிவர்சல் சீரியல் பஸ்
(b) யுனிவர்சல் சீரியல் பை-பாஸ்
(c) யுனிவர்சல் சிஸ்டம் பஸ்
(d) யுனிவர்சல் சீரியல் பஸ் Universal Serial Bus

25. பின்வருவனவற்றில் எந்த போர்ட்  port  வேகமாகத் தரவு பரிமாற்றம் செய்கிறது?

(a) USB
(b) Serial
(c) Parallel
(d) Firewire

26. USB போர்ட் என்பது a

(a) சீரியல் போர்ட்
(b) பேரலல் போர்ட்
(c) அகச்சிவப்பு போர்ட்
(d) ஏஜிபி போர்ட்

Types of Computer கணினி வகைகள்

வடிவமைப்புத் தொழினுட்ப அடிப்படையில் வகைப்படுத்தல்

ஒத்திசைக் கணினி  (Analog Computers)

சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான பௌதிக மாற்றங்களான (கதி, வோல்ட் அளவு, அமுக்கம், வெப்பநிலை) போன்ற ஒத்திசைச் சைகைகளை (Analog Signals)எனப்படும். இவற்றை இனங்கண்டு அதற்கேற்பத் தொழிற் படும் கணினிகள் ஒத்திசைக் கணினிகள் எனப்படும். வேகமானி, உணரிகள் (sensors) உள்ள வீதி விளக்குகள், வானிலை அளவிடும் கருவிகள் போன்றன  இதற்கு உதாரணங்களாகும். ஒட்திசைக் கணினிகள் எண்கலளைப் பயன் படுத்தாது கணித்தல்களை மேற்கொள்கின்றன.

இலக்கமுறைக் கணினி (Digital Computers)

நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் கணினிகள் இலக்கமுறைக் கணினிகள் ஆகும். இக்கணினிகள் இலக்கமுறைச் சைகைகளை (Digital Signals)) இனங்கண்டு தொழிற்படுகின்றன. இவை 0, 1 எனும் இரு இலக்கங்களைக் கொண்ட துவித எண் முறையில் எல்லாவிதமான தரவுகளும் பிரதிநிதித்துவப் படுத்துவதோடு கணித்தல்களும் மேற்கொள்ளப் படுகின்றன.


கலப்பினக் கணினி (Hybrid Computers)

ஒத்திசைக் கணினிகள் (Analog Computers), இலக்கமுறைக் கணினிகள் (Digital Computers)  ஆகிய இரு வகைகளினதும் ஒரு கலப்பாகக் கலப்பினக் கணினிகளை அறிமுகஞ் செய்யலாம். இதயத்தின் தொழிற்பாட்டை அவதானிப்பதற்கு மருத் துவமனையில் பயன்படுத்தப்படும் ECG இயந்திரம் ஒரு கலப்பினக் கணினியாகும். ஒத்திசைச் சைகையாகிய (analog signals) இதயத்தின் தொழிற்பாட்டை இனங்கண்டு அதனை இலக்கமுறைச் சைகையாக மாற்றி அச்சைகைகளை அச்சிடுதல் இப்பொறியின் மூலம் நடைபெறுகின்றது

பருமன் மற்றும் செயற்திறனுக்கேற்ப வகைப்படுத்தல்

மீக்கணினிகள் (Super Computers)

இக்கணினிகள் அதியுயர் ஆற்றல் மிக்கவை. விஞ்ஞான, பொறியியல் பணிகளுக்காகவும் சிக்கலான கணிதப் பிரசினங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் இக்கணினிகள் நாசா (NASA) போன்ற வானியல் ஆராய்ச்சி மையங்களிலும் பெரிய வியாபார நிறுவகங்களிலும், பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் (internet)  சேர்வர் கணினியாகவும் பயன்படுத்தப்படுகின்றன

Server  - Computers that provide shared resources to networks கணினி வலையமைப்பிலுள்ள ஏனைய கணினிகளுக்கு சேவைகளை வழங்க இவ்வகைக் கணினிகள் பயன்படுத்தப்படும். இவற்றின் நினைவக ஆற்றல் அதிகளவு தரவுகளை சேமிக்கக் கூடியதாக இருக்கும். சேவையக கணினிகள் செயற்படும் வேகமும் பொதுவான கணினிகளை விட அதிகமானதாகும். பல கணினிகளை இணைத்து உருவாக்கப்பட்ட கணினித் தொகுதியே கணினி வலையமைப்பு எனப்படும;

Client -  Computers that access shared networks resources provided by server  
ஒரு சேர்வரிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் கணினி

இது ஒரு பல் பயனர் (multi user) கணினியாகும். அதாவது பல பயனர்கள் ஒரு கணினியுடன் இணைந்து பல முடிவிடங்களைப் பயன்படுத்தித் தரவுகளையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ளல், தேக்கி வைத்தல், மீண்டும் பெறுதல் ஆகியவற்றை மேற் கொள்ளல் ஆகும்.

பெருமுகக் கணினிகள் (Mainframe Computers)


இவை மீக்கணினிகளிலும் பார்க்க வேகம், ஆற்றல், குறைந்தவை. பெருமுகக் கணினித் தொழினுட்பவியல் என்பது பெரிய வணிக நிறுவனக்களில், வங்கிகளில் சேர்வர் கணினியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் ஒரு பல் பயனர் கணினியாகும். இணையத்திலும் சேர்வர் கணினியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சிறு கணினிகள் (Mini Computers)

பெருமுகக் கணினிகளிலும் பார்க்க வேகம், ஆற்றல், குறைந்தவை.. பயன்படுத்துவதற்கு எளிதானது இது ஒரு பல் பயனர் (multi user) கணினியாகும். வணிக நிறுவனக்களில், வங்கிகளில் சேர்வர் கணினியாகப் பயன் படுத்தப்படுகின்றன. இணையத்திலும் சேர்வர் கணினியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பணிநிலையக் கணினிகள் (Workstations)

அதிக ஆற்றல்களுடன்அமைக்கப்பட்ட தனியாள் கணினிகள் (Destop PC) பணிநிலையக் கணினிகள் (Workstations) எனப்படும். 3D Graphic Designing இல் இவ்வகைக் கணினிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தனி நபர் கணினிகள் / நுண் கணினிகள் (Personal Computers - PC / Micro Computers)

தனி நபர் பயன் பாட்டிற்குப் (single user) பயன்படுத்தப்படும் இக்கணினிகள் மேற்குறிப்பிட்ட கணினி வகைகளோடு ஒப்பிடும் போது குறைந்த செயற் திறனைக் கொண்டவை. அளவிலும்  சிறியதாகும்.

இவற்றிற்கு Desktop computers, Laptop computers, Note Book computers, Tablet PCs, Wearing Computers என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். பொதுவாக நாம் வீடுகளிலும் பாடசாலைகளிலும் பயன் படுத்துவது தனி நபர் கணினிகளே.       

Internet இணையம்

ICT Quiz 2-Computer Fundamentals

OL ICT 2013 DBMS

22, 23 இற்கு விடையளிப்பதற்கு கணினிப் பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீழே தரப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணையைக் கருதுக.

  1. அட்டவணையிலுள்ள ஒரு கணினிப் பாகம் தொடர்பான சகல தரவுகளும்
    (1) புலம் (கநைடன) எனப்ப டும். (2) சாவி (மநல) எனப்படும்.
    (3) வினவல் (ஙரநசல) எனப்படும். (4) பதிவு (சநஉழசன) எனப்படும்.
  2. இவ்வட்டவணையிலுள்ள புலங்கள் எத்தனை ?
    (1) (2) 3 (3) 4 (4) 12

ஒரு தரவுத்தள அட்டவணையின் முதற் சாவி (pசiஅயசல மநல) தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது ?
(1) முதற் சாவி வெறிதாக இருத்தல் கூடும்.
(2) முதற் சாவி எண்சார் (ரெஅநசiஉ) தரவு வகையாக இருத்தல் வேண்டும்.
(3) முதற் சாவி பாடத் தரவு வகையாக இருத்தல் வேண்டும்.
(4) முதற் சாவி ஒருதனியானதாக இருத்தல் வேண்டும்.

  1. பல வழங்குநர்களால் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை விற்பனை செய்கிறது. சிற்றுண்டிச்சாலையானது தற்போது உள்ள உணவுப் பொருட்கள், வழங்குநர்கள், கொள்வனவு விவரம் ஆகியவற்றைக் கொண்ட கீழே காட்டப்பட்ட மூன்று அட்டவணைகளுடனான தரவுத்தளத்தைப் பேணுகிறது.

(i) இரண்டு முதற் சாவிகளையும் (primary key) அவற்றிற்குரிய அட்டவணைகளையும் பட்டியலிடுக.

(ii) மாணவனொருவன் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று ஒரு மீன் பணிஸும் (fish bun) ஒரு பழச்சாற்றுப் போத்தலும் (fruit drink) வாங்குகிறான்.

(a) இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை ஃ அட்டவணைகள் எது ஃ எவை ?
(டb) இற்றைப்படுத்திய பதிவுகளை (updated records) எழுதுக.

(iii) சிற்றுண்டிச்சாலை புதிய உணவுப்பண்டமாக 25 கட்டகளை மீனா [SuppID: S002 எனும் வழங்குநரிடமிருந்து 20/9/13 அன்று கொள்வனவு செய்ய எண்ணியது.

(a) இவற்றுக்காக இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணைகள் எவை?
(b) புதிதாக அவற்றிற்குரிய அட்டவணைகளில் சேர்க்கப்பட வேண்டிய பதிவுகளை எழுதுக.

Storage Devices தேக்கச் சாதனங்கள்

துணை நினைவகம்   அல்லது துணை தேக்கச் சாதனம் (Secondary Memory / Auxiliary Storage)

துணை நினைவகம் அல்லது துணைத் தேக்கம் என்பது தரவுகளை நிரந்தரமாக தேக்கி வைக்கும் துணையுறுப்பாகும். இது புறத் தேக்கம் எனவும் அழைக்கப்படும். தேக்கச் சாதனக்களின் கொள்ளளவு பைட் (byte) இல் அளவிடப்படுகிறது.

காந்த  ஊடகச் சாதனங்கள் Magnetic Devices

காந்த ஊடகச் சாதனங்கள் காந்த ஏற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தரவுகளைத் தேக்கி வைக்கின்றன.

வன் வட்டு (Hard Disk)

தரவுகளைத் தேக்கி வைக்கப் பயன்படும் மிகப் பிரபலமான ஊடகமாகிய வன்வட்டு பொதுவாகக் கணினியினுள்ளே நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். எனவே அதனை Fixed Disk அழைக்கப்படுகிறது.  எனினும் புறத்தேயிருந்து கணினிக்குத் தொடுக்கப்படக் கூடிய  வன்வட்டுகளும் (external hard disk)  உள்ளன.  தற்போது 250 GB இற்கும் 4 TB இற்குமிடையிலான பெரிய கொள்ளளவைக் கொண்ட வன் தட்டுக்கள் பயன் பாட்டிலுள்ளன. . ஒரு வன் தட்டில் புதிதாக தரவுகளைப் பதியவோ (write)  பதிந்ததைப் படிக்கவோ  (read) முடியும்..

காந்த நாடா (Magnetic Tape)

குறைந்த கதியையும் உயர் கொள்திறனையும் கொண்டிருப்பதனால் தரவுகளைப்  பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு (backup)  மாத்திரம் இவை பயன்படுத்தப்படுகின்றன. தினசரி பயன் பாட்டில் இவற்றைக்  காண முடியாது. .

நெகிழ் வட்டு / ப்லொப்பி டிஸ்க் (Floppy Disk)

ஹாட் டிஸ்க் போலன்றி தேவையேற்படும் போது மட்டும் கணினியில் பொருத்தி பயன் படுத்தத் தக்கதாகவும் (removable disk)  இடத்துக் இடம் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் (portable) வடிவமைக்கப்பட்ட முதல் தேக்கச் சாதனம் ப்லொப்பி டிஸ்க் ஆகும்.  இது 3.5 அங்குல நீல அகலத்தில் சதுர வடிவில் காணப்பட்டது. எனினும் இதன் உச்ச கொள்ளளவு 1.44 MB அளவிலேயே இருந்தது. இக்கொள்ளளவு இன்றைய எமது தேவைக்கு எவ்வகையிலும் போதாமையால் பாவனையிலிருந்து முற்றாக நீங்கியுள்ளது.

ப்லொப்பி டிஸ்க்கில் எழுதவும், படிக்கவும் Floppy Disk Drive பயன் படுத்தப்பட்டது. எம்.எஸ்.டொஸ் மற்றும் விண்டோஸ் இயங்கு தளங்களில்  A, B எனும் இரண்டு ட்ரைவ் எழுத்துக்கள் இந்த ப்லொப்பி டிஸ்க் ட்ரைவிற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன

சிப் டிஸ்க் - Zip Disk

ப்லொப்பி டிஸ்க்கின் சிறிய கொள்ளளவு காரணமாக அதே தொழில் நுட்பத்துடன்  அதனை விட கூடிய கொள்ளளவு கொண்டதாய் (100 MB)  சிப்டிஸ்க் வடிவமைக்கப்படு வெளிவந்தன. ஆனால் அதே கால கட்டத்தில் சிடி மற்றும் டிவிடி போன்றவற்றின் வருகை காரணமாக சிப் டிஸ்க் பிரபல்யமடையவில்லை. பின்னர் அதன் கொள்ளளவு 250 MB,  750 MB என அதிகரித்தாலும் பென் ட்ரைவ்களின் அறிமுகம் காரணமாக அதனோடு போட்டிபோட முடியாமல் பிரபல்யமடையாமலேயே பாவனையிலிருந்து இல்லாமல் போனது.

ஒளி சார்ந்த சேமிப்பு ஊடகங்கள் (Optical Storage media)

ஓர் உலோகத் தட்டில் குறிப்பதன் (வெட்டுவதன்) மூலம் தரவுகள் தேக்கி வைக்கப்படுகின்றன. தரவுகளை இடத்துக்கிடம் கொண்டு செல்வதற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் இவை  பல வகைகளில் கிடைக் கின்றன. CD, DVD, BD என்பன இதற்கு உதாரணங்களாகும். இவற்றின் வருகையினால் ப்லொப்பி டிஸ்க் , சிப் டிஸ்க் போன்றவற்றின் பயன் பாடு இல்லாமல் போய் விட்டன.

திண்ம நிலைச் சாதனங்கள்  (Solid state devices)

USB flash drive, Memory card என்பன திண்ம நிலைச் சாதனங்கள்  எனப்படுகின்றன.

ஹாட் டிஸ்க் ட்ரைவ் மற்றும் சிடி ட்ரைவ் போன்று  உள்ளே அசையும் பாகங்கள்  இல்லாத திண்ம நிலையில் இருப்பதனால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.  

USB பளிச்சீட்டுச் செலுத்தி
(USB flash drive / Pen Drive / Thumb Drive / Memory Stick)

எளிதாக இடத்துக்கிடம் கொண்டு செல்லத் தக்கதாக இருப்பதனாலும் விரைவாகத் தரவுகளைக் அணுகக் குடியதாக இருப்பதனாலும் பென் ட்ரைவ் எனும் USB பளிச்சீட்டுச் செலுத்தி  தற்போது அதிக பயன் பாட்டிலுள்ளன. இவை தற்போது 4 முதல் 128 GB வரையில் பல் வேறு கொள்ளளவுகளில் கிடைக்கின்றன இதனை கணினியின் USB குதையில் பொருத்தப்படும்.

நினைவக அட்டை (Memory card)

பளிச்சீட்டு இயக்கியை ஒத்த தொழிற் பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால், கணினியுடன் தொடுப்பதற்கான தொழினுட்பம் மாறும் அதே வேளை அளவும் சிறிதாகும். இலக்கமுறைக் கமரா, செல்பேசி, கணினி விளையாட்டுக் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றைக் கணினியோடு தொடுப்பதற்கு card reader எனும் கருவி பயன் படுகிறது.

உதாரணம்

SD Card - Secure Digital Memory Card
Micro SD Memory cards
MMC -Multi Media Cards
SDHC (Secure Digital High Capacity) Memory Cards.

Cloud Storage
தற்போது இணையம் என்பது சர்வ சாதாரணமாக மனித வாழ்க்கையோடு ஒன்றி விட்டதன் காரணமாக இணைய சேர்வகளும் தரவுத் தேக்கத்திற்காகப் பயன் படுத்தப்பட ஆரம்பித்துள்ளன. இதற்கு வேறு எவ்வித துணைத் தேக்கச் சாதனங்களையும் பயன் படுதாமல் இனணைய இணைப்புடன் கூடிய ஒரு கணினியோ அல்லது கையடக்கக் கருவியோ இருந்தாலே போதுமானது

Tech-Terms Tamil-English

1. அகச்சிவப்புக் கதிர்Infrared ray
2. அச்சுப் பொறிPrinter
3. அட்டவணைTable
4. அடிக்குறிப்புFooter
5. அதிக மதிப்புறுMost Significant Bit-MSB
6. அரை-இருவழிHalf-Duplex
7. அழிக்கத்தக¢க செய்நிரல்டுத்தக்கூடிய வாசிப்புErasable Programmable Read Only Memory
8. அழிதகா நினைவகம்Non-volatile Memory
9. அழிதகு நினைவகம்Volatile Memory
10. படவில்லைSlides
11. ஆளிSwitch
12. இடத்துரி வலையமைப்புLocal Area Networks
13. ஓரச்சு வடம்Co-axial Cable
14. இணையம்Internet
15. இயங்குநிலை எழுமானப் பெறுவழி நினைவகம்Dynamic Random Access Memory-DRAM
16. இரும / துவிதBinary
17. இருவழிDuplex
18. இலக்க ஒளித்தோற்ற வட்டுDigital Versatie Disk
19. இலக்கமுறை கணினிDigital Computer
20. இலக்கமுறை கமராDigital Camera
21. மின்னணு ஆவணம்Electronic Document
22. மின்னணு ஊடகம்Electronic Media
23. மின்னணு கற்றல்e- Learning
24. இழை ஒளியியல்Fiber Optics
25. இறுவட்டுCompact Disk
26. உரு அளவுZoom
27. உள்தள்ளுகைIndentation
28. உள்ளீடுInput
29. எண்கணித தர்க்க அலகுArithmetic and Logic Unit - ALU
30. எண்மOctal
31. ஒத்திசை / தொடர்திசை கணினிAnalog Computer
32. ஒளியியல் எழுத்துரு கண்டறிதல்Optical Character Recognition-OCR
33. ஒளியியல் தொழிநுட்பம்Optical Technology
34. ஒற்றைSimplex
35. ஓரங்கள்Margins
36. ஓரங்களை சீர்ப்படுத்தல்Margins Setting
37. கட்டுப்பாட்டு அலகுControl Unit
38. கட்டுப்பாட்டு சாவிControl Key
39. கடிகாரக் கதிClock Speed
40. கணினி அடிப்படையிலான கற்பித்தல்Computer Based Teaching-CBT
41. கணினி உதவியுடனான கற்றல்Computer Assisted Learning-CAL
42. கணினி தொழிநுட்பம்Computer Technology
43. கத்தோட்டுக் கதிர் குழாய்Cathode Ray Tubes
44. கதிர்ப்புRadiation
45. கதிர்ப்பு ஊடகம்Radiated Media
46. கருவிப்பட்டைToolbar
47. கல முகவரிCell Address
48. கலப்புக் கணினிகள்Hybrid Computers
49. கலம்Cell
50. காந்த தொழினுட்பம்Magnetic Technology
51. காந்தநிலை தட்டுMagnetic Platter
52. காப்புத் தேக்ககம்Backing Storage
53. குதை / துறைPorts
54. குவியம்Hub
55. குறுக்குவழிச் சாவிShortcut Key
56. குறை முக்கியவத்துவ பிற்றுLeast Significant Bit- LSB
57. குறைகடத்திSemiconductor
58. கூட்டல் பொறிAdding Machine
59. கொள்ளளவுCapacity
60. பைல் நீட்டிப்புFile Extension
61. கோப்புறைFolder
62. சமாந்தர தரவு செலுத்தம்Parallel data Transmission
63. சார்ப்பு கல முகவரிRelative Cell Address
64. சாவிப் பலகைKeyboard
65. சாவிப்புலம்Key Field
66. சிறுகணினிகள்Minicomputers
67. சுட்டிMouse
68. செயலுறுFunction
69. செயற்கை நுண்மதிArtificial Intelligence
70. சேமிStoring / Save
71. சொல் முறை வழியாக்க மென்பொருள்   Word Processing Software
72. தகவல்Information
73. தசமம்Decimal
74. தரவுData
75. தரவுத் தளம்Database
76. தலைப்புHeader
77. தலைமை படவில்லைSlide Master
78. தற்போக்கு பெறுவழி நினைவகம்Random Access Memory
79. தன்னியக்க காசளிப்பு இயந்திரம்Automatic Teller Machine-ATM
80. தாய்ப்பலகைMotherboard
81. திசைச் சாவி Arrow Key
82. திரான்சிஸ்ரர் Transistor
83. துணை சேமிப்பகம் Secondary Storage
84. துணைப் பதுக்க நினைவகம் Secondary Cache Memory
85. துளை அட்டை Punch Card
86. கணினித்திரை Monitor
87. ஒன்றிணைக்கப் பட்ட சுற்று Integrated Circuits
88. தொடர் சாதனங்கள் Serial Devices
89. தொடர் தரவு செலுத்தல் Serial Data Transmission
90. தொடர்பாடல் செய்மதி Communication Satellite
91. தொடர்பாடல் தொழினுட்பம் Communication Technology
92. தொலைக் கல்வி Distance Education
93. நிகழ்த்துகை Presentations
94. நிகழ்நிலைப்படுத்தல் / இற்றைப்படுத்தல் Update / Upgrade
95. நிரல் தலைப்பு Column Heading
96. நிலத்தோற்ற அமைவுரு Landscape Format
97. நிலை தற்போக்கு பெறுமதி நினைவகம் Static Random Access Memory-SRAM
98. நினைவகம் Memory
99. நுண் அலைகள் Microwaves
100. நுண் சில்லுகள் Microchips
101. நுண்கணினி Microcomputer
102. நுண்முறை வழியாக்கி Microprocessor
103. நெகிழ் வட்டு Floppy Disk
104. நேர்ப்படுத்தல் Alignment
105. பக்க அமைப்பு Page Setup
106. பகுப்புப் பொறி Analytical Engine
107. படவில்லை எறிவை Slide Projector
108. படிவம் Form
109. பணிசெயல் முறைமை Operating System
110. விரிதாள் Worksheet
111. பணிப்புத்தகம் Work Book
112. பதிவு Record
113. பதினறுமHexa-decimal
114. பதுக்கு நினைவகம் Cache Memory
115. பல்லூடக தொழினுட்பம் Multimedia Technology
116. பல்லூடக நிகழ்த்துகை Multimedia Presentation
117. பன்முறை வழியாக்கம் Multi Processing
118. பிற்று Bit
119. புலம் Field
120. புள்ளி அமைவுரு அச்சுப் பொறி Dot Matrix Printer
121. பூகோள கிராமம் Global Village
122. பூலியன் கோவை Boolean Expression
123. பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு Metropolitan Area Networks
124. பெரும் பரப்பு வலையமைப்பு Wide Area Networks
125. பொத்தான் Button
126. முதன்மை பதுக்க நினைவகம் Primary Cache Memory
127. முதன்மைக் கணினி Mainframe Computer
128. முதன்மைக் களஞ்சியம் Primary Storage
129. முற்றுறு கல முகவரி Absolute Cell Address
130. முறைவழியாக்கம் Processing
131. முனைநிலைப்படுத்தல் Portrait format
132. மெகாஹேட்ஸ் Megahertz - MHz
133. மெய்நிலை அட்டவணை Truth Table
134. மென்பிரதி Soft Copy
135. மென்பொருள் Software
136. மேந்தலை எறிவை Overhead Projector
137. மை பீச்சு அச்சுப் பொறி Modem
138. மோடெம் Ink Jet or Bubble Jet Printer
139. லேசர் அச்சு Laser Printers
140. வடிவமைப்பு படிம அச்சு Design Template
141. வரி அச்சு Line Printer
142. வரி இடைவெளி Line Spacing
143. வரிசை Row
144. வருடி Scanner
145. வருவிளைவு Output
146. வலையமைப்பு இடத்தியல் Network Topology
147. வலையமைப்பு குவியம் Network Hub
148. வன் பிரதி Hard Copy
149. வன் வட்டு Hard Disk
150. வாசிப்பு மட்டும் நினைவகம் Read Only Memory
151. விரிதாள் Spreadsheet
152. வினவல் Query
153. வெப்ப அச்சுப் பொறி Thermal Printer
154. வெற்றிடக்குழாய் Vacuum Tube
155. கிகாஹேட்ஸ் Gigahertz - GHz

OL ICT 2014 DBMS Tamil

விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன கிரிக்கெற் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள், வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும். அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது

(1) புலம் (field) எனப்படும்.                  (2) அந்நியச் சாவி (foreign key) எனப்படும்.

(3) படிவம் (form) எனப்படும்.              (4) பதிவு (record) எனப்படும்.

17. துணிகளை விற்பனை செய்யும் கடையொன்றுக்குப் பல விநியோகத்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு விநியோகத்தருக்கும்  பல துணி வகைகளை விநியோகிக்க முடியும். இக்கடையில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய துணி வகைகளின் தரவுகள் அடங்கிய தரவுத்தள அட்டவணைக்கு மிகப் பொருத்தமான முதன்மைச் சாவி பின்வருவனவற்றுள் எது ?

(1) பொருளின் குறியீட்டு எண்    (2) விலை   (3) அளவு  (4) விநியோகத்தரின் குறியீட்டு எண்

18. பின்வருவனவற்றுள் தொடர்பு நிலை தரவுத்தளம் பற்றிய கூற்றுகளுள் சரியானது

(1) தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரைகளுக்கிடையிலான இணைப்பு (association) ஆகும்.

(2) தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரல்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.

(3) தொடர்புடைமை என்பது இரண்டு அட்டவணைகளுக்கிடையிலான இணைப்பு ஆகும்.

(4) தொடர்புடைமை என்பது இரண்டு தரவுத்தளங்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.

3. பாடசாலை நூலகத்தில் உள்ள புத்தகங்கள், மாணவர்கள் மற்றும் மாணவர் புத்தகங்களை இரவல் பெற்ற விபரம் ஆகிய  விவரங்களைச் சேகரிக்கும் கீழேயுள்ள தரவுத்தள அட்டவணைகளை கருதுக

 (i) முதன்மைச் சாவிப் பெறுமானங்கள் இரண்டைப் பட்டியலிடுக.

(ii) Book_Title “Lion King'ஐயும் BookID *B1008' ஐயும் கொண்ட புதிய புத்தகம் நூலகத்தில் சேர்க்க ப்படுகிறது.

(a) இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை(கள்) எது/எவை ?

(b) அட்டவணையில்/அட்டவணைகளில் இற்றைப்படுத்த வேண்டிய நிரை/நிரைகளைக் காட்டுக.

(iii) குமார் 25/10/2014 அன்று நூலகத்திற்குச் சென்று 'Arthur' எனும் புத்தகத்தை இரவலாகப் பெற்றார்.

(a) இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணை(கள்) எது/எவை ?

(b) அட்டவணையில்/அட்டவணைகளில் இற்றைப்படுத்த வேண்டிய நிரை/நிரைகளை எழுதுக

ICT Quiz 1-Computer Fundamentals

OL ICT 2009 DBMS

20. பொதுப் புலங்களினால் ஒன்றாக இணைக்கப்பட்ட அட்டவணைகளைக் கொண்ட தரவுத் தளம்

(1) தட்டைக் கோப்புத் (flat-file) தரவுத் தளம் எனப்படும்.

(2) ஒருமுகப்படுத்தப்பட்ட (centralized) தரவுத் தளம் எனப்படும்.

(3) விரவல் (distributed) தரவுத் தளம் எனப்படும்.

(4) தொடர்புநிலைத் (relational) தரவுத் தளம் எனப்படும்.

21. தரவுத் தளமொன்றின் அட்டவணையொன்றில் Memo புலமானது பயன்படுத்தப்படுவது

(1) நீண்ட பாடங்களை (lengthy text) களஞ்சியப்படுத்துவதற்கு

(2) செவிப்புலத் துண்டங்களை (audio clips) களஞ்சியப்படுத்துவதற்கு

(3) ஒளித்தோற்றத் துண்டங்களை (video clips) களஞ்சியப்படுத்துவதற்கு

(4) நீண்டபாடங்களையும் செவிப்புலத் துண்டங்களையும் களஞ்சியப்படுத்துவதற்கு

OL ICT 2015 DBMS

25 தொடக்கம் 27 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. தரப்பட்டுள்ள அட்டவணைகள் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்குள்ள புத்தகங்களையும் (Books) அவற்றின் வெளியீட்டாளர்களையும் (Publishers) பற்றிய தரவுகளைக் காட்டுகின்றன.

25. Book அட்டவணையில் உள்ள Unit_Price இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை (data type) யாது? Book ml;ltizapy; cs;s Unit_Price ,w;F kpfTk; nghUj;jkhd juT tif (data type) ahJ?

(1) Currency (2) Date (3) Number (4). Text

26. பின்வருவனவற்றில் எது Book அட்டவணையில் முதற் சாவிக்கு (Primary Key) மிகவும் பொருத்தமானது? gpd;tUtdtw;wpy; vJ Book ml;ltizapy; Kjw; rhtpf;F (Primary Key) kpfTk; nghUj;jkhdJ

(1) Book_ID (2) Book_Name (3) Quantity (4) Unit_Price

27. பின்வரும் புலப் பெயர்களில் எது ஓர் அன்னியச் சாவிக்கு (Foreign key) உதாரணமாகும்? gpd;tUk; Gyg; ngaHfspy; vJ XH md;dpar; rhtpf;F (Foreign key) cjhuzkhFk;?

(1) Book அட்டவணையின் ml;ltizapd;  Book_Name

(2) Book Publisher  அட்டவணையின் Book_ID

(3) Publisher அட்டவணையின் Publ_Phone

(4) Publisher அட்டவணையின் Publisher_Name

3. XYZ Sports என்பது பல வழங்குநர்களினால் வழங்கப்படும் விளையாட்டு உருப்படிகளை விற்கும் ஒரு கடையாகும். இக்கடை தற்போது இருப்பில் உள்ள உருப்படிகள், அவற்றின் வழங்குநர்கள், வழங்குநர்களிடமிருந்து கொள்வனவு செய்த உருப்படிகள் ஆகியவற்றைத் தேக்கிவைப்பதற்குப் (store) பின்வரும் மூன்று அட்டவணைகளைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தைப் (database) பேணுகின்றது.

 (i) இந்தத் தரவுத்தளத்தில் பயன்படுத்தத்தக்க இரு முதற் சாவிப் (Primary key) புலங்களையும் அவற்றின் அட்டவணைப் பெயர்களையும் எழுதுக.

(ii) கடை "Tennis ball' என்னும் ஒரு புதிய உருப்படியைச் சேர்ப்பதற்குத் தீர்மானித்ததுடன் அவற்றில் 30 அலகுகளை  றீட்டா (Rita) என்ற வழங்குநரிடமிருந்து 229 ஆந் திகதி கொள்வனவு செய்தது.

(a) இதற்காக எந்த அட்டவணை அட்டவணைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டி உள்ளது உள்ளன?

(b) இற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை அட்டவணைகளுக்குரிய புதிய பதிவை பதிவுகளை எழுதுக. (iii) ஒரு வாடிக்கையாளர் ஒரு வொலிபோலையும் (Volleyball) ஒரு துடுப்பையும் (Bat) வாங்குகின்றார்.

(a) இதற்காக எந்த அட்டவணை அட்டவணைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டி உள்ளது உள்ளன?

(b) இற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை அட்டவணைகளுக்குரிய பதிவை பதிவுகளை எழுதுக.

Data and Information

தரவு  (Data):

ஒரு பொருள், ஒரு நபர், மற்றும் ஒரு நிகழ்வை விவரிக்கக் கூடியவற்றை தரவுகள் எனப்படும். . வெறும் தரவுகள் (raw data) அர்த்தமுடையதாக இருக்காது. மேலும் அவற்றைக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க முடியாது.

தவணைப் பரீட்சையில் (ஒரு நிகழ்வு)  ஒரு மாணவன் ஒவ்வொரு பாடங்களிலும் எடுக்கும் புள்ளிகள் தரவுகளுக்கு உதாரணமாகும்.

கணினியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு செய்யக்கூடிய தன்மையிலுள்ள எண்கள் எழுத்துக்கள் உருவங்கள் ஒலி காட்சிகள் என்பன கணினி தரவுகள் (computer data) எனப்படும்.   

உரை Text, இலக்கம் Numbers தேதி, மற்றும் Multimedia கோப்புகளை கணினி சார்ந்த தரவுகளாகக் கருத முடியும்,.

In English Data (plural) ;  datum (singular)

தகவல் (Information):

தரவுகளை நிரற்படுத்தல் ஒழுங்கமைத்தல் அல்லது செயன்முறைக்குட்படுத்தல் என்பனவற்றினால் பெறப்படுகின்ற முடிவுகள் தகவல் எனப்படும். அதாவது தரவுகளை செய்முறைப்படுத்துவதன் மூலம் தகவல்கள் பெறப்படும். தகவல் அர்த்தமுள்ளதாகவும் ஒழங்கான அமைப்பிலும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

தவணைப் பரீட்சை முடிவில் மாணவனிடம் ஒப்படைக்கப்படும் முன்னேற்ற அறிக்கைப் புத்தகம் (Progress Report Book) தகவலுக்கு உதாரணமாகும்.

தகவலின் பண்புகள் 

  1. அர்த்தம் கொடுக்கும்
  2. தீர்மானம் எடுப்பதற்கு உதவும் 
  3. நேர வரையறை உடையது 
  4. நோக்கத்தை நிறைவேற்றக்கூடுயது 
  5. முழுமையானது 
  6. எளிமையானது 
  7. நம்பகத்தன்மையானது
  8. செய்முறைக்கு உட்படுத்தப்பட்டது 
  9. முன்னர் பெற்ற அறிவை புதுப்பிக்கக் கூடியது 
  10. காலத்திற்கு பொருத்தமானது 

பண்பறி / நல்ல தகவலின் பண்புகள்

பொருத்தப்பாடு
பூரணத்துவம்
செம்மை
காலத்திற்குப் பொருத்தமாயிருத்தல்

தரவும் தகவலும்

தரவும் தகவலும் நெருக்கமான தொடர்பு கொண்டவை. தரவுகள் தகவலின் கூறுகள். தரவுகளிலிருந்தே தகவல் பெறப்படுகிறது. தரவு இல்லையேல் தகவல் இல்லை. தரவு என்பது கண்டறியப்படும் ஒரு மெய்ம்மை (fact). ஒரு குறிப்பிட்ட செயல்பாடு தொடர்பாக முறையான ஆய்வுகள் மூலம் பெறப்பட்டதாகவும் இருக்கலாம்.

25 என்று சொன்னால் அது ஓர் எண். 25 ஆண்டுகள் என்று சொன்னால் அது ஒரு காலகட்டம். குமரன் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னால் அது குமரனின் வயதைக் குறிக்கிறது. குமரன் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரின் வயதுகளையும் ஏறு வரிசையில் அட்டவணைப் படுத்தும்போது (தரவுச் செயலாக்கம்) அந்த அலுவலகத்திலேயே குமரன்தான் இளையவர் என்கிற தகவல் பெறப்படுகிறது.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information & Communication Technology)

ஒரு நிறுவனத்தில் தகவல்களைக் கையாளவதற்குப் பயன் படும் தொழில் நுட்பமே  தகவல் தொழில் நுட்பம் எனப்படுகிறது. கணினி, இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி கணினிகளினுhடாக தரவுகளை செய்முறைக்கு உற்படுத்துவதன் மூலம் தகவல்களை இலத்திரனியல் வடிவில் அல்லது வேறுவடிவங்களில் ஒழுங்கமைப்புச் செய்தல் மற்றும் பரிமாறல் செய்தல் என்பன தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் அடக்கம். இச்செயற்பாடுகளில் கணினிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

IT மற்றும்  ICT என்பன ஒரே  விடயத்தையே குறித்து நிற்கின்ற அதேவேளை  IT எனும் சொல் தொழிற் துறைகளிலும் (industries)  ICT எனும் சொல் கல்வித் துறையிலும் பொதுவாகப் பயன்பாட்டிலுள்ளன.

கணினி என்றால் என்ன?

கணினி என்பது ஒரு இலத்திரனியல் சாதனமாகும். இது தரவுகளை உள்ளீடு செய்து செயற்பாட்டுக்கு உட்படுத்தி பயனுள்ள தகவல்களை  வருவிளைவாகத் தருவதுடன் அவற்றைச் சேமித்து வைக்கக் கூடிய  வசதியையும் தரும் ஒரு சாதனமாகும்.

IPO Model - Input - Process - Output

தற்பொழுது எத்துறையிலும் கணினியின் பயன்பாடானது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. எனினும் பின்வரும் துறைகளில் கணினி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

  • கல்வி
  • கணக்கியலும் வங்கியியலும்
  • பொறியியல்
  • போக்குவரத்து
  • சுகாதார சேவை
  • பாதுகாப்பு
  • பொழுதுபோக்கு
  • தொடா;பாடல்

கணினியின் பண்புகள் (Characteristics of Computer)

1. ;வேகம் (Speed)

2. திருத்தம் (Accuracy)

3. நம்பகத்தன்மை (Reliability)

4. சேமிக்கும் தன்மை (Storage Capability)

5. பல் செயலாற்றும் தன்மை (Versatility)

6.  உணர்வற்ற தன்மை (No feeling)

7. சிந்திக்கும் ஆற்றல் இல்லாமை (No IQ)  -  Intelligence Quotient

1. வேகம் (Speed)

கணினியானது ஒரு நிமிடத்திற்கு மில்லியன் அல்லது பில்லியன் எண்ணிக்கையான அறிவுறுத்தல்களை செயற்படத்தும் வல்லமையுடையது. கணிதச் செயற்பாடுகள்இ ஆவணங்கள் தயாரித்தல்இ தகவல்களை இடமாற்றல்இ பிரதி செய்தல்இ ஒரு வடிவத்தில் இருந்து இன்னோர் வடிவத்திற்கு மாற்றல் போன்ற எந்தச் செய்ற்பாடாயினும் மிக வேகமாக செயற்படுத்தக்கூடியது.

2. திருத்தம் (Accuracy)

கணினியானது மில்லியன் எண்ணிக்கையான அறிவுறுத்தல்களை எந்தவிதப் பிழையுமின்றி துல்லியமாக செயற்படுத்தும் ஆற்றலுடையது. கணினியின்மூலம் பெறப்படும்  முடிவுகள் எப்போதும் வழுக்கள் அற்றதாய் இருக்கும்.

3. நம்பகத்தன்மை (Reliability)

கணினியிற்கு வழங்கப்படும் உள்ளீடுகள் மற்றும் கணனியிற்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் நம்பகரமானவைகளாக இருக்கும் போது அதன் வெளியீடுகளும் மிக நம்பகரமானவையாகவே காணப்படும். கணினியிற்கு வழங்கப்படும் உள்ளீடுகள் அல்லது கணனியிற்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் நம்பகரமானவையாக இல்லாத போது அதன் வெளியீடுகள் நம்பகரமானவையாகக் காணப்படாது. இதனை ஆங்கிலத்தில் Gabage In Gabage Out; (GIGO) vdப்படுகிறது.

4. சேமிக்கக்கூடிய தன்மை (Storage Capability)

கணினிகள் மிக அதிகளவான தகவல்களை ஒரு சிறிய ஊடகத்தில் சேமித்து வைத்திருக்கும் தன்மை கொண்டது. இதற்காக வன் ர்யசன னளைமஇ ஊனுஇ னுஏனுஇ ஆயபநெவiஉ வயிந  என்பன பயன்படுத்தப்படுகின்றன.

5. பல்செயலாற்றல் (Versatility)

பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடியமை கணினியின் ஒரு சிறப்பியல்பாகும். ஒரு தடவைப் புள்ளிப் பட்டியலைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் கணினியை வேறொரு தடவை உங்களுக்கு விருப் பமான பாடலைக் கேட்பதற்கு அல்லது விளையாடுவதற்குப் பயன்படுத்தலாம்.

ஒரு கணினியில் பின்வரும் நான்கு செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

  1. உள்ளீட்டைப் பெற்றுக்கொள்ளல் (input data)
  2. தரவுகளை செய்முறைப்படுத்தல் (process data)
  3. தகவல்களை வெளியிடுதல் (output information))
  4. தகவல்களை சேமித்தல் (Store information)

ஒரு கணினி தொகுதியை (computer system) நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்

1. வன்பொருள் (Hardware)

கணினியில் பௌதீகரீதியாக கண்களாhல் பார்க்கக்கூடியதும் கையால் தொட்டுணரக்கூடியதுமான பகுதிகள் கணினி வன்பொருள் எனப்படும். இவை கணினியின் உற்பகுயில் அல்லது வெளிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கலாம்.

eg: Hard Disk, Motherboard, Monitor, Printer, RAM …..

2. மென்பொருள் (Software)

இது கணினி என்ன செய்ய வேண்டும் ன்பதைக் குறிக்கின்ற இலத்திரனியல் ரீதியான அறிவுறுத்தல்களின் தொகுதியாகும். (Set of instruction)  மென்பொருட்களை பிரதானமாக முறைமை மென்பொருள் (System software) பிரயோக மென்பொருள் (Application software) என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். Eg: Microsoft Office, Windows, Adobe Photoshop,

3. தரவு (Data) : மேலே விவரிக்கப்பட்டுள்ளது

4. உயிர்ப்பொருள் (Liveware);.

கணினியை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் நபர்கள் உயிர;ப்பொருள்ஃ பயனர் என அழைக்கப்படுவர். இது பயனாளர் (user) பயன்படுத்தும் தேவைகளைப் பொருத்து அவர்களது தொழில்சார் பெயர்கள் கொண்டு அழைக்கப்படும்.

Ex: Data Entry Operator, Graphic designer, Software engineer, Hardware technician

செயற்பாடு 1

  1. தரவு என்பதற்கு மூன்று  உதாரணங்கள் தருக.
  2. தகவல் என்பதற்கு மூன்று  உதாரணங்கள் தருக.
  3. தரவு மற்றும் தகவலுக்கிடையே உளள இரண்டு வேறு பாடுகளை தருக.
  4. நல்ல தகவலின் பண்புகள் நான்கு தருக.
  5. கணினியின் பண்புகள் நான்கு தருக.
  6. கணினி அல்லது தகவல் தொழிநுட்பம் பயன் படும் நான்கு துறைகள் தருக.
  7. கணினி முறைமையொன்றின் நான்கு பிரிவுகளும் யாவை?
  8. கணினி முறைமையொன்றில்  IPOS என்பது எதனைக் குறிக்கிறது?
  9. கணினி பயன் பாட்டின் சாதகமான விடயங்கள் இரண்டு தருக.
  10. கணினி பயன் பாட்டின் பாதகமான  விடயங்கள் இரண்டு தருக
  1. பின்வருவனவற்றில் தரவு மற்றும் தகவல் என்பவற்றிற்கான எடுத்துக்காட்டுகள் எவை.

A. ஒரு மாணவர் வயது / வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் சராசரி வயது

B. மொத்த கணக்கு இருப்பு / வங்கி வைப்புத் தொகை

C. ஒரு ஓட்டப் போட்டியின் வெற்றி நேரம் / ஓட்டத் தடத்தின் (track) நீளம்

D. ஒரு கணினியின் விலை / ஒரு நிறுவனத்தின் அனைத்து கணினிகளின் மொத்த விற்பனை